Spread the love

தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி சார்நிலைப் பணியில் உதவி பயிற்சி அலுவலர் -சுருக்கெழுத்து-ஆங்கிலம் (Assistant Training Officer-Stenography-English) மற்றும் தமிழ்நாடு பொது சார்நிலைப் பணியில் இளநிலை தொழில் நுட்ப உதவியாளர் (Junior Technical Assistant) பதவிகளுக்கான காலிப்பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்(TNPSC) மூலம் நேரடி நியமனம் செய்கிறது. இதற்கான கணினிவழித் தேர்விற்கு 16.08.2023 அன்று வரை இணைய வழி மூலம் மட்டுமே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பதவிகளுக்கான தேர்வு கணினிவழித் தேர்வாக நடத்தப்படும்.

வேலை வாய்ப்பு விவரங்கள்

நிறுவனத்தின் பெயர்தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி சார்நிலை (குறியீட்டு எண்: 028 )
பதவியின் பெயர்1. உதவி பயிற்சி அலுவலர்- ஸ்டெனோகிராபி-ஆங்கிலம் -(Assistant Training Officer, Stenography in English)
2. இளநிலை தொழில் நுட்ப உதவியாளர் – (Junior Technical Assistant)
மொத்த காலிப் பணியிடங்கள்7
வகைஅரசு வேலைவாய்ப்பு
வேலை இடம்தமிழ்நாடு
தகுதிடிகிரி
விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலமாக
அறிவிப்பு தேதி18.07.2023
கடைசித் தேதி16.08.2023

மொத்த காலியிடங்கள்

பணியின் பெயர்காலிப் பணியிடங்கள்
இள நிலை தொழில்நுட்ப உதவியாளர்5
உதவி பயிற்சி அலுவலர்2

இட ஒதுக்கீடு விவரங்கள்

உதவி பயிற்சி அலுவலர்- 2

  1. மி பி வ/ சீ.ம (பொது)- 01
  2. பி. வ. (பொது) (த.வ.க.)-01

இளநிலை தொழில்நுட்ப உதவியாளர் பணி -5

  1. பொது.பி.(பொது)-01
  2. பொது.பி.(பெ)-01,
  3. பி. வ. (பொது)-01
  4. மி.பி.வ./சீ.ம.(பொது)-01
  5. ஆ.தி.(அ) (பெ) (த.வ.க)-01

உதவி பயிற்சி அலுவலர், இளநிலை தொழில்நுட்ப உதவியாளர் சம்பளம் விவரங்கள்

பணியின் பெயர்
சம்பள விவரம்
தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி சார்நிலைப் பணி) (குறியீடு எண்.028)ரூ.35,900-1,31,500/- நிலை-13)
தமிழ் நாடு பொது சார்நிலைப் பணி (குறியீடு எண்.040)Rs 35,400-– 1,30,400)( Level 11)

Eligibility Details

கல்வித் தகுதி/ Education Qualification

உதவி பயிற்சி அலுவலர்- ஸ்டெனோகிராபி-ஆங்கிலம் -(Assistant Training Officer, Stenography in English):

1. விண்ணப்பதாரர்கள் கல்லூரி படிப்பு முடித்து இருக்கவேண்டும்.

2. அரசு நடத்தும் சீனியர் கிரேடு தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்தில் ஆங்கிலத்தில் முதல் நிலையில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.

3. அரசு நடத்தும் தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்தில் தமிழில் ஜூனியர் கிரேடு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். .

2. இளநிலை தொழில் நுட்ப உதவியாளர் – (Junior Technical Assistant)

1. விண்ணப்பதாரர்கள் பொதுக்கல்வி தகுதி பெற்றிருக்க வேண்டும்.

2. கைதறி தொழில் நுட்பத்தில் டிப்ளமோ (Diploma in Handloom Technology) முடித்திருக்க வேண்டும்.

அல்லது

ஜவுளி உற்பத்தில், தொழில் நுட்ப டிப்ளமோ (Diploma in Textile Manufacture) தேர்வு பெற்றிருக்க வேண்டும்.

Age Limit

உதவி பயிற்சி அலுவலர்.

ஆ.தி. ஆ.தி(ஆ), ப.ப., மி.பி.வ./சீ.ம., பி.வ. பி.வ.(மு) மற்றும் அனைத்து வகுப்புகளையும் சார்ந்த ஆதரவற்றவிதவைகள்.குறைந்தபட்சம் 18 வருடங்கள், மேலும் அதிகப்பட்ச வயது வரம்பு இல்லை.
ஏனையோர்குறைந்தபட்சம் 18 வருடங்கள், மேலும் அதிகப்பட்ச வயது 37 வருடங்கள்.

இளநிலை தொழில் நுட்ப உதவியாளர்

ஆ.தி., ஆ.தி.(அ), ப.ப., மி.பி.வ/சீ.ம., பி.வ. பி.வ.(மு) மற்றும் அனைத்து வகுப்புகளையும் சார்ந்து ஆதரவற்ற விதவைகள்குறைந்தபட்சம் 18 வருடங்கள், மேலும் அதிகப்பட்ச வயது வரம்பு இல்லை.
ஏனையோர்குறைந்தபட்சம் 18 வருடங்கள், மேலும் அதிகப்பட்ச வயது 372வருடங்கள்.

விண்ணப்பக் கட்டணம், தேர்வுக்கட்டண விபரம்

1. நிரந்திரப் பதிவுக்கட்டணம்: ஒருமுறை பதிவுக்கட்டணமாக ரூ 150 கட்டவேண்டும்.

ஏற்கனவே ஒருமுறை பதிவுக்கட்டணம் கட்டியவர்கள் கட்டிய தேதியில் இருந்து 5 வருடங்களுக்கு கட்ட தேவையில்லை.

2.தேர்வுக்கட்டணம்: தேர்வுக்கட்டணம் சலுகை பெற தகுதி உடையவர்கள் தவிர பிற விண்ணப்பத்தாரர்கள் தேர்வுக்கட்டணம் ரூ 150/- செலுத்தவேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை

  • விண்ணப்பத்தாரர்கள் https://www.tnpsc.gov.in/ என்ற இணைய முகவரிக்கு செல்லவும்.
  • இங்கு வேலை வாய்ப்பு நோட்டிஃபிகேசன் இருக்கும்
  • விண்ணப்பதாரர்கள் Assistant Training (Stenography- English) & (Junior Technical Assistant (Textile Department) Tamil Nadu Employment Training Subordinate Service & Tamil Nadu General Subordinate Service). என்ற லிங்கை தேடி” apply Online ” என்பதை கிளிக் செய்யவும்.
  • “ஒருமுறை பதிவு” செய்யாதவர்கள் தங்கள் போட்டோ, கையெழுத்து மற்றும் சர்டிஃபிகேட்டுகளை பதிவேற்றம் செய்து முதல் முறை பதிவு செய்யவும்.
  • ஏற்கனவே ஒருமுறை பதிவு செய்தவர்கள் தாங்கள் விண்ணப்பிக்க விரும்பும் லிங்கை தேடி விண்ணப்பிக்கவும்.

முக்கிய தேதிகள்

அறிவிப்பு தேதி18.07.2023
கடைசித் தேதி16.08.2023
இணையவழி விண்ணப்பத்தை திருத்தம் செய்யவதற்க்கான காலம்21.08.2023 நள்ளிரவு 12.01 மணி வரை
கணினி வழித்தேர்வு நடைபெறும் நாள்05.10.2023
தாள்-1 பாடம் பட்டயப்படிப்பு தரம்) உதவி பயிற்சி அலுவலர் (சுருக்கெழுத்து -ஆங்கிலம்)05.10.2023 முற்பகல் 9.30 மணி முதல்
தாள் 2 பகுதி அ கட்டாயம் தமிழ் மொழித் தகுதி தேர்வு (10 ஆம் வகுப்புத் தரம்)
பகுதி ஆ-பொது அறிவு (பத்தாம் வகுப்பு தரம்)
05.10.2023 பிற்பகல் 02.30. மணி முதல் 5.30 வரை
தாள்-1 (பாடம்) (பட்டயப்படிப்பு தரம்) இளனிலை தொழில்நுட்ப உதவியாளர்06.10.2023 முற்பகல் 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை

உதவி பயிற்சி அலுவலர்

பாடம்கால அளவுஅதிகபட்ச பதிப்பெண்ஆ.தி., ஆ.தி(அ)., ப.ப.,மி.பி.வ/சீ.ம., பி.வ.(மு தவிர) மற்றும் பி.வ.(மு)ஏனையோர்
தாள் I
பட்டயப்படிப்பு தரம் (100 வினாக்கள்) சுருக்கெழுத்து ஆங்கிலம் code.No. 378.
11/2 மணி நேரம்15090120
தாள் II பகுதி அ. கட்டாயம் தமிழ்மொழி தகுதித் தேர்வு (10ம் வகுப்புத் தரம்) (100 வினாக்கள் / 150 மதிப்பெண்கள்)3 மணி நேரம்15090120
பகுதி ஆ
பொது அறிவு (100 வினாக்கள்/150 மதிப்பெண்கள்)
பொது அறிவு (10ம் வகுப்புத் தரம்) 75 வினாக்கள் மற்றும் திறனாய்வுத் தேர்வு (10 வகுப்புத் தரம் 25 வினாக்கள்
3 மணி நேரம்15090120

இளநிலை தொழில் நுட்ப உதவியாளர்

பாடம்கால அளவுஅதிகபட்ச பதிப்பெண்ஆ.தி., ஆ.தி.(ஆ)., ப.ப., மி.பி.வ\சீ.ம., பி.வ.(மு.தவிர) மற்றும் பி.வ.(மு)ஏனையோர்
தாள்.1:
(பட்டாய படிப்பு தரம் (200 வினாக்கள்) கைத்தறி தொழில் நூட்பம்/ ஜவுளி தொழில் நூட்பம்/ ஜவுளி தொழில் நூட்பம் / ஜவுளி உற்பத்தி (Code no. 339)
3 மணி நேரம்300135180
தாள் 2
பகுதி அ
கட்டாய தமிழ்மொழித் தகுதித் தேர்வு
(10 வகுப்பு தரம்)
(100 வினாக்கள் /150 மதிப்பெண்கள்
3 மணி நேரம்150135180
பகுதி ஆ
பொது அறிவு (100 வினாக்கள் / 150 மதிப்பெண்கள்)
பொது அறிவு (10ம் வகுப்புத் தரம்) 75 வினாக்கள் மற்றும் திறனாய்வுத் தேர்வு (10ம் வகுப்புத் தரம்)-25 வினாக்கள்
3 மணி நேரம்150135180

தேர்வு பாடங்கள் மற்றும் வினாவிவரங்களை நோட்டிஃபிகேசன் பிடிஎஃபை தெளிவாக படிக்கவும்.

Selection Procedure

தகுதியான நபர்கள் முதலில் தமிழில் தேர்ச்சி பெற்று இருக்கவேண்டும். பிறகு தேர்வு மதிப்பெண் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்க படுவார்கள்

முக்கிய இணைய இனைப்புகள்/ Important Links Notification

தமிழில் பிடிஎஃப் அறிவிப்பு

Advertisement in English PDF

Official Website – https://www.tnpsc.gov.in/

கணினி வழித்தேர்வு நடைபெறும் தேதி மற்றும் நேரம்

ஆன்லைனில் “ஒருமுறை பதிவு” விண்ணப்பிக்க

Assistant Training Officer (Stenography- English) & Junior Technical assistant (Textile Department) (Tamilnadu Employment Training Subordinate Service & Tamilnadu General Subordinate Service

TNPSC JOBS

Similar Posts