தமிழ் நாடு அரசு விரைவு கோக்குவரத்து கழகத்தின் ஓட்டுனருடன் நடத்துனர் வேலை காலிபணியிட அறிவிப்புகள் வெளியிடப் பட்டுள்ளன. பத்தாம் வகுப்பு படித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்க தகுதியுடைவர்கள் ஆவர்.
இதற்கான விண்ணப்பங்கள் www.arasubus.tn.gov.in இணைதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். ஓட்டுனருடன் நடத்துனர் வேலை தமி நாடு அர்சு வேலைக்கான தகுதிகள், வின்ணப்பம் செய்வது எப்படி என்று இங்கு தொகுக்கப்பட்டு உள்ளது.
ஓட்டுனருடன் நடத்துனர் வேலை 2023 விவரங்கள்
நிறுவனத்தின் பெயர் | அரசு விரைவுபோக்குவரத்து கழகம் |
பதவியின் பெயர் | ஓட்டுனர் உடன் நடத்துனர் -Driver Cum Conductor |
மொத்த காலிப் பணியிடங்கள் | 685 |
வகை | அரசு வேலைவாய்ப்பு |
வேலை இடம் | தமிழ்நாடு |
தகுதி | பத்தாம் வகுப்பு தேர்ச்சி |
விண்ணப்பிக்கும் முறை | இணையதளம் மூலமாக |
கடைசித் தேதி | 18.09.2023 மதியம் 01.00 வரை |
அறிவிப்பு எண் | 01/SETC/2023 |
பணி விபரம் மற்றும் சம்பள விவரம்
ஓட்டுனருடன் நடத்துனர் வேலைக்கு சம்பளம் விவரம் பணிநியமணம் பொறுத்து தெரிவிக்கப்படும்
வேலைக்கான தகுதிகள்
கல்வி தகுதி
பத்தாம் வகுப்பு -SSLC தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழில் பேசவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்
வயது வரம்பு மற்றும் பொதுவான தகுதிகள்
1. விண்ணப்பதாரர் 01.01.2023 அன்று குறைந்தபட்சம் 24 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும்.
2. 01.01.2023 அன்று பொதுவகுப்பினர் (OC) 40 வயது பூர்த்தியாகாமலும், (BC/MBC/DNC/SC/ST) 45 வயது பூர்த்தியாகமலும் இருத்தல் வேண்டும்.
3. முன்னாள் இராணுவத்தினருக்கு 01.01.2023 அன்று (OC) 50 வயது பூர்த்தியாகாமலும், (BC/MBC/DNC/SC/ST) 55 வயது பூர்த்தியாகமலும் இருத்தல் வேண்டும்.
4. இன சுழற்சி அரசு விதிமுறைகளின் படி நடைமுறைபடுத்தபடும்.
சாலை போக்குவரத்து நிறுவனம் மூலம் தேர்ச்சி பெற்றவர்களுக்கு குறைந்தபட்சம் வயது 24 மற்றும் 18 மாதங்கள் முன் அனுபவம் நிபந்தனைகள் பொருந்தாது.
மற்ற தகுதிகள்
கனரக வாகன ஓட்டுநர் உரிமம் மற்றும் குறைந்தபட்சம் 18 மாதம் வாகனம் ஓட்டிய அனுபவம், முதலுதவி சான்று பொதுப் பணி வில்லை மற்றும் செல்லத்தக்க நடத்துநர் உரிமம் 01.01.2023 முன்னர் பெற்றதாக இருத்தல் வேண்டும்.
உயரம் மற்றும் எடை தகுதி:
உயரம் குறைந்தபட்சம் 160 செ மீ எடை 50 கீலேகிராம்.
உடல் தகுதிகள்
- உடல் தகுதி : எவ்விதமான உடல் அங்க குறைபாடு (Physical deformity) அற்றவராக இருத்தல் வேண்டும். கண் பார்வைத் திறன் நிர்ணயிக்கப்பட்ட அளவுக்குள் இருக்க வேண்டும்.
- உடல் தகுதி : (1) கண் பார்வைத்திறன் குறைபாடு, (2) காது கேட்கும் திறன் குறைபாடு, (3). இரவுக் குருடு மற்றும் நிறக்குருடு குறைபாடு, (4). வளைந்த கால்கள், முழங்கால்கள் ஓட்டுதல் மற்றும் சம்மான பாதங்கள் ஆகிய குறைபாடுகள் இல்லாமல் இருக்க வேண்டும்.
தேர்வு கட்டணம்
SC/ST பிரிவினர்க்கு – Rs.590/- (18%GSTincluding)
இதர பிரிவினர்க்கு RS.1180/- (18% GST including)
விண்ணப்ப கட்டணம் எந்த காரணத்தை முன்னிட்டும் திரும்ப வழங்கப்படமாட்டாது
விண்ணப்ப கடைசி தேதி
இணைதளத்தின் முலம் விண்ணப்பம் பதிவு செய்ய கடைசி தேதி 18.09.2023 அன்று மதியம் 1 மணி வரை மட்டுமே.
தேர்வு செய்யும் முறை/ Selection Procedure
எழுத்து தேர்வு, செய்முறை தேர்வு, நேர்முக தேர்வு, மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார். இத் தேர்வுக்கு வருபவர்களுக்கு பயணச் செலவு ஏதும் வழங்கப்படமாட்டாது.
Important Links Notification
தமிழில் பிடிஎஃப் அறிவிப்பு– லிங்க்
Advertisement in English– Link
Official Website – www.arasubus.tn.gov.in/